பிரித்தானியா சிறைகளில் பேராபத்து... ஸ்டார்மர் அரசாங்கத்தின் அதிர்ச்சி முடிவு
பிரித்தானியாவில் சிறையிலிருக்கும் கொடூரமான குற்றவாளிகளை ஸ்டார்மர் அரசாங்கம் விடுதலை செய்ய இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அவசரமாக காப்பாற்ற நடவடிக்கை
பிரித்தானில் உள்ள சிறைகளில் கூட்ட நெரிசலை சமாளிக்கவும் பேராபத்தைத் தவிர்க்கவும் லேபர் அராசங்கம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் ரிஷி சுனக் அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ள நீதித்துறை செயலர் ஷபானா மஹ்மூத்,

மொத்தமாக ஸ்தம்பித்துப் போகும் நிலையில் இருந்து சிறைகளை அவசரமாக காப்பாற்ற நடவடிக்கை எடுக்க தவறிவிட்டார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த நிலையில், குற்றவாளிகள் தங்கள் தண்டனைக் காலத்தின் 40 சதவிகிதம் நிறைவு செய்திருந்தால் விடுவிக்கப்படுவார்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் குடும்ப வன்முறையில் ஈடுபட்டவர்கள், தீவிரவாதிகள் என குறிப்பிட்ட பட்டியலில் வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு புதிய விதிமுறை பொருந்தாது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
புதிதாக பணிக்கு அமர்த்த
இருப்பினும், கொடூரமான குற்றவாளிகள், மூன்றாண்டுகள் தண்டனையை நிறைவு செய்திருந்தாலும் விடுவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதுடன், அவர்களை கண்காணிக்கும் பொருட்டு, உரிய அதிகாரிகளை புதிதாக பணிக்கு அமர்த்தவும் திட்டமிருப்பதாக நீதித்துறை செயலர் ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார்.
ஸ்டார்மர் அரசாங்கத்தின் இந்த புதிய முடிவால், ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் விடுதலையாக உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |