14 ஆண்டுகளுக்கு பிறகு பிரித்தானியா ஒளிர்கிறது..! லண்டனில் லேபர் கட்சி தலைவர் வெற்றி உரை
பிரித்தானியாவில் லேபர் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அதன் தலைவர் சர் கீர் ஸ்டார்மர் மத்திய லண்டனில் ஆதரவாளர்கள் மத்தியில் வெற்றி உரையை நிகழ்த்தினார்.
14 ஆண்டுகளுக்கு பிறகு லேபர் கட்சி ஆட்சி
பிரித்தானியாவில் நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் 14 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தனிப்பெரும்பான்மையுடன் லேபர் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
Today, Britain’s future is on the ballot. pic.twitter.com/qJosPsz1bk
— Keir Starmer (@Keir_Starmer) July 4, 2024
லேபர் கட்சி தலைவரின் வெற்றி உரை
லேபர் கட்சியின் தனிப்பெரும்பான்மை உறுதியான சில நிமிடங்களுக்கு பிறகு மத்திய லண்டனில் ஆதரவாளர் மத்தியில் கரகோஷங்களுடன் தோன்றிய தலைவர் சர் கீர் ஸ்டார்மர் தனது வெற்றி உரையை தொடங்கினார்.
வெற்றி உரையை “நன்றி” உடன் தொடங்கிய சர் கீர் ஸ்டார்மர் "நாம் இதை செய்துவிட்டோம்”, "இதற்காக தான் நீங்கள் பிரச்சாரம் செய்தீர்கள், இதற்காக தான் நீங்கள் சண்டையிட்டீர்கள், இப்போது வெற்றி வந்துவீட்டது”, என தெரிவித்தார்.
அத்துடன் மாற்றம் இப்போது தொடங்கிவிட்டது, நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் மீதான சுமை நீங்கவிட்டது என்ற நிம்மதியுடன் கண்விழித்துள்ளார்கள் என லேபர் கட்சியின் தலைவர் சர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
We said we will stop the chaos. And we will.
— Keir Starmer (@Keir_Starmer) July 5, 2024
We said we will turn the page. And we have.
The work of change begins today. pic.twitter.com/nROZuPdxNj
அத்துடன் நாட்டின் மீது இருந்த மிகப்பெரிய சுமையும் தற்போது இறுதியாக நீங்கிவிட்டது என தெரிவித்துள்ளார்.
மேலும் பிரித்தானியாவால் இப்போது மீண்டும் முன்னோக்கி செல்ல முடியும், 14 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்காலத்தை பெறுவதற்கான வாய்ப்புடன் ஒட்டுமொத்த நாடும் ஒளிர்கிறது என தெரிவித்தார்.
லேபர் கட்சி தொடர்ந்து அதிக இடங்களை கைப்பற்றி வருகிறது, தற்போது 343 இடங்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |