பொதுத் தேர்தல் வரலாற்றில்... லேபர் கட்சி வெற்றி தொடர்பில் வெளியான புதிய கருத்துக்கணிப்பு
லேபர் கட்சி பிரித்தானியாவில் ஆட்சி அமைப்பது 99 சதவிகிதம் உறுதி என சுட்டிக்காட்டும் கருத்துக்கணிப்புகள், இதுவரை இல்லாத வகையில் வரலாறு படைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.
மொத்தமுள்ள 650 ஆசனங்களில்
கடந்த 1997ல் டோனி பிளேயரின் வெற்றியை விடவும் இந்த முறை லேபர் கட்சி அதிக பெரும்பான்மையுடன் வரலாறு படைக்கும் என்றே புதிய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
Survation என்ற அமைப்பு முன்னெடுத்த கருத்துக்கணிப்பில் லேபர் கட்சி மொத்தமுள்ள 650 ஆசனங்களில் 484 எண்ணிக்கையை கைப்பெற்றும் என்றே தெரிய வந்துள்ளது.
இந்த கணிப்பானது உண்மையானால் லேபர் கட்சி மிருக பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்றே கூறுகின்றனர். 1997 தேர்தலில் டோனி பிளேயர் தலைமையில் லேபர் கட்சி 418 ஆசனங்களை வென்றது.
அத்துடன் அறுதிப் பெரும்பான்மைக்கும் அதிகமாக 179 ஆசனங்கள் பெற்றிருந்தனர். இதனால் லேபர் கட்சியின் ஆட்சி 2010 வரையில் நீடித்தது. இது இவ்வாறு இருக்க, ரிஷி சுனக்கின் கனசர்வேட்டிவ் கட்சியின் பரிதாப நிலையையும் Survation அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது.
ரிஷி சுனக் தமது தொகுதியில்
உத்தியோகப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறவும் கன்சர்வேட்டிவ் கட்சியால் முடியாது என்றும், இதனால் Liberal Democrats கட்சியுடன் இணைந்து எதிர்க்கட்சி அந்தஸ்தை கைப்பற்ற ரிஷி சுனக்கின் கனசர்வேட்டிவ் கட்சி திட்டமிட்டு வருவதாக Survation தெரிவித்துள்ளது.
இந்தமுறை கன்சர்வேட்டிவ் கட்சி 64 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றும் என்றும் Liberal Democrats கட்சி 61 ஆசனங்களை வெல்லும் என்றும், ரிஷி சுனக் தமது தொகுதியில் கட்டாயம் வெல்வார் என்றும் Survation அமைப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |