கெய்ர் ஸ்டார்மரின் இடத்துக்கு போட்டி: தேர்தலில் வெற்றி பெற்றது யார்?
Labour wins Holborn and St Pancras by-election: முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்தது அனைவரும் அறிந்ததே.

அதுமட்டுமின்றி, ஸ்டார்மர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நேற்று, அதாவது, அக்டோபர் மாதம் 8ஆம் திகதி, அவரது தொகுதியான Holborn and St Pancras தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
கெய்ர் ஸ்டார்மரின் இடத்துக்கு போட்டி
ஸ்டார்மரின் இடத்துக்கு கடும் போட்டி இருந்தது. கிரீன் கட்சித் தலைவரான ஸாக் போலன்ஸ்கி, எப்படியும் அந்த தொகுதியைக் கைப்பற்றிவிடும் முடிவுடன் தீவிர பிரச்சாரம் செய்துவந்தார்.

இந்திய வம்சாவளியினரான ரிஷி மத்லானி (44) என்னும் நபரும் போட்டியில் இணைய விரும்ப, லேபர் கட்சி சார்பில், சகல் அப்திவாலி (Sagal Abdi-Wali, 42) என்னும் பெண் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
தேர்தலில் வெற்றி பெற்றது யார்?
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன. லேபர் கட்சி சார்பில் போட்டியிட்ட சகல் அப்திவாலி, 12,292 வாக்குகள் பெற்று Holborn and St Pancras தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

சகல் அப்திவாலி, 1900களில், ஒரு சிறுமியாக, சோமாலியாவிலிருந்து அகதியாக வந்தவர் ஆவார்.
கடும் பிரச்சாரம் செய்துவந்த கிரீன் கட்சித் தலைவரான ஸாக் போலன்ஸ்கி, இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 8.928. மூன்றாமிடத்தை, கன்சர்வேட்டிவ் கட்சி பிடித்துள்ளது.
விடயம் என்னவென்றால், Holborn and St Pancras தொகுதி, காலம் காலமாக லேபர் கட்சியின் கோட்டையாகும். இதுவரை அந்த தொகுதியில் லேபர் கட்சி தோல்வி அடைந்ததில்லை.
ஆக, தன் கோட்டையை தக்கவைத்துக்கொண்டுள்ளது லேபர் கட்சி. என்றாலும், இதற்கு முன் பெற்ற வாக்கு வீதத்தை ஒப்பிடும்போது, இம்முறை அதைவிட குறைவான வாக்குகளையே லேபர் கட்சி பெற்றுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.