லேபர் கட்சியின் ஆட்சி... நாடுகடத்தப்படும் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
லேபர் கட்சியின் சர் கெய்ர் ஸ்டார்மர் ஆட்சிக்கு வந்த பின்னர் பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படும் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடுகடத்தப்பட்டுள்ளனர்
இருப்பினும் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களும் வெளிநாட்டு குற்றவாளிகள் என ஆயிரக்கணக்கானோர் தற்போதும் பிரித்தானியாவில் சிக்கியுள்ளனர்.
உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், ஜூலை 5ம் திகதி முதல் ஆகஸ்டு மாதம் கடைசி வரையில் 1,240 பேர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நாடுகடத்தப்படுபவர்களின் எண்ணிக்கை 23 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது.
மேலும், ஜூலை - ஆகஸ்டு மாதங்களில் 2,360 பேர்கள் தாமாகவே தங்கள் நாடுகளுக்கு திரும்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தது 14,385 சட்டவிரோத புலம்பெயர் மக்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்றே உள்விவகார செயலாளர் யவெட் கூப்பர் உறுதியளித்துள்ளார்.
இதுவரை 26,612 பேர்கள்
அதாவது நான்கு மாதங்களுக்குள் பிரித்தானியாவில் இருந்து சட்டவிரோத புலம்பெயர் மக்கள் 10,785 பேர்கள் வெளியாற்றப்பட உள்ளனர். இது ஒருபுறமிருக்க, இந்த ஆண்டில் இதுவரை 26,612 பேர்கள் சிறு படகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர்.
மேலும், புகலிடம் தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய 225,000 பேர்கள் இறுதி முடிவுக்காக காத்திருக்கின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதில் நாடுகடத்தப்பட வேண்டியவர்கள், மேல்முறையீடு செய்தவர்கள், அரசாங்க முடிவுக்காக காத்திருப்பவர்கள் என பட்டியல் நீள்கிறது.
மட்டுமின்றி, ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்க இருந்த புலம்பெயர் மக்கள் தற்போது வியட்நாம் மற்றும் திமோர்-லெஸ்டே உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |