காலே டெஸ்டில் சதம் விளாசிய அவுஸ்திரேலிய வீரர்! வெளிநாட்டு மண்ணில் முதல் சதம்
இலங்கைக்கு எதிரான இரண்டவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்ன்ஸ் லபுஸ்சாக்னே சதம் விளாசினார்.
காலேவில் இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது. டேவிட் வார்னர் 5 ஓட்டங்களில் கசுன் ரஜிதா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து நிதானமாக ஆடிய உஸ்மான் கவாஜா 37 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். எனினும் முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய லபுஸ்சாக்னே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
PC: AFP
அவர் 147 பந்துகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7வது சதத்தை பூர்த்தி செய்தார். வெளிநாட்டு மண்ணில் அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.
அணியின் ஸ்கோர் 204 ஆக இருக்கும்போது திக்வெல்லவினால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு லபுஸ்சாக்னே அவுட் ஆனார். 156 பந்துகளை எதிர்கொண்ட அவர் 12 பவுண்டரிகளுடன் 104 ஓட்டங்கள் எடுத்தார்.
AAP
பின்னர் களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் அரைசதம் கடந்தார். அவுஸ்திரேலியா அணி தற்போது வரை 3 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஸ்மித், ஹெட் ஆகியோர் களத்தில் உள்ளனர்.