ஹாட்ரிக் சதம் விளாசி சாதனை படைத்த வீரர்!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மார்னஸ் லபுசாக்னே சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
மார்னஸ் லபுசாக்னே
சதம் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் அவுஸ்திரேலியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் ஆடி வரும் நிலையில், மார்னஸ் லபுசாக்னே ஹாட்ரிக் சதம் அடித்துள்ளார்.
Three in a row! ???
— cricket.com.au (@cricketcomau) December 8, 2022
Marnus Labuschagne's purple patch continues in Adelaide! #PlayOfTheDay#AUSvWI | @nrmainsurance pic.twitter.com/49XmNaqEhD
ஹாட்ரிக் சாதனை
முதல் டெஸ்ட் போட்டியில் 204, 104 ஓட்டங்கள் எடுத்த மார்னஸ் லபுசாக்னே, இரண்டாவது டெஸ்டிலும் சதம் அடித்திருப்பதன் மூலம் இரண்டு முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் சதம் விளாசிய இரண்டாவது அவுஸ்திரேலிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
லபுசாக்னே 2019ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 185, 162 மற்றும் 143 ஓட்டங்கள் என ஹாட்ரிக் சதங்கள் விளாசியபோது, பிராட் மேன் மற்றும் கில்கிறிஸ்ட் ஆகியோருடன் சாதனைப் பட்டியலில் இணைந்தார்.
@cricketcomau
ஆனால் தற்போது அவர் ஏற்கனவே இருமுறை ஹாட்ரிக் சதங்கள் விளாசிய வார்னருடன் இணைந்துள்ளார்.
அவுஸ்திரேலிய அணி முதல்நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 330 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மார்னஸ் லபுசாக்னே 120 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.