இரட்டை சதம் விளாசிய அவுஸ்திரேலிய வீரர்! பெர்த் டெஸ்டில் மிரட்டல் ஆட்டம்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டில் மார்னஸ் லபுசாக்னே இரட்டை சதம் விளாசினார்.
இரட்டை சதம்
பெர்த்தில் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
அவுஸ்திரேலியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 293 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மார்னஸ் லபுசாக்னே 154 ஓட்டங்களுடனும், ஸ்டீவன் ஸ்மித் 59 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய அவுஸ்திரேலிய அணியில் அபாரமான ஆட்டத்தை தொடர்ந்த லபுசாக்னே இரட்டை சதம் அடித்தார்.
@Getty Images
இது அவருக்கு இரண்டாவது இரட்டை சதம் ஆகும். 350 பந்துகளை எதிர்கொண்ட லபுசாக்னே ஒரு சிக்ஸர், 20 பவுண்டரிகளுடன் 204 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள லபுசாக்னே 2743 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 8 சதங்கள் அடங்கும்.
@Twitter/@ICC