கிரிக்கெட் அப்பாக்கள்! கையில் பிள்ளைகளை ஏந்திக் கொண்டு நிற்கும் வீரர்கள்
மைதானத்தில் தங்கள் பிள்ளைகளை கையில் ஏந்திக் கொண்டு நிற்கும் புகைப்படத்தை அவுஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசாக்னே பதிவிட்டுள்ளார்.
டெஸ்ட் தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலியா
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா கைப்பற்றியது. அவுஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது.
கடைசி போட்டி டிராவில் முடிந்தது. இரட்டை சதம் விளாசிய டேவிட் வார்னர் தொடர் நாயகன் விருதை பெற்றார். முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய லபுசாக்னே கடைசி டெஸ்டில் 79 ஓட்டங்கள் எடுத்தார்.
@AP
கடைசி டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் அவுஸ்திரேலிய வீரர்கள் தங்கள் குடும்பத்துடன் மைதானத்தில் வெற்றியை கொண்டாடினர்.
பிள்ளைகளுடன் அவுஸ்திரேலிய வீரர்கள்
குறிப்பாக, தங்கள் பிள்ளைகளை கையில் ஏந்திக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மகிழ்ச்சி தருணம் குறித்த புகைப்படம் ஒன்றை கிரிக்கெட் அப்பாக்கள் என குறிப்பிட்டு மார்ன்ஸ் லபுசாக்னே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Cricket dads ? pic.twitter.com/ciWYyRb9wH
— Marnus Labuschagne (@marnus3cricket) January 8, 2023
அந்த புகைப்படத்தில் லபுசாக்னே, வார்னர், கேரி, கவாஜா உள்ளிட்டோர் தங்கள் பிள்ளைகளை கையில் ஏந்திக் கொண்டு நிற்கின்றனர்.
@Getty