இந்தியாவிலும் Gen Z போராட்டம்? - லடாக் மாநில அந்தஸ்து கோரிய போராட்டத்தில் 4 பேர் உயிரிழப்பு
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரிய போராட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து
கடந்த 2019 ஆம் ஆண்டில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய இந்திய அரசு, காஷ்மீர் மற்றும் லடாக் என யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
இந்நிலையில், காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி அந்த பகுதி மக்களிடையே கோரிக்கை வலுத்து வருகிறது.
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை போல் லடாக்கை அரசியலமைப்பின் 6வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலிறுத்தப்பட்டு வருகிறது.
கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், 15 பேருடன் இணைந்து உண்ணாவிரதத்தை தொடங்கினார். இதில், இருவரின் உடல்நிலை மோசமடைய தொடங்கியதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு
இதனை தொடர்ந்து, ABL (Apex body of Ladakh), அமைப்பு இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது.
லே பகுதியில், ABL அமைப்பின் இளைஞர் பிரிவு சார்பில் ஆர்பட்டாம் நடத்தப்பட்டது. இதில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து, 6 வது அட்டவணையில் சேர்த்தல் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.
பாஜக அலுவலகம் முன்பு போரட்டத்தில் ஈடுபட்ட போது, இந்த போரட்டம் வன்முறையாக மாறியது.
இந்த வன்முறையில், காவல்துறையினரின் வாகனங்கள் பாஜக அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர், கண்ணீர் புகை மற்றும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இந்த வன்முறையில் தற்போது வரை, 4 பேர் உயிரிழந்துள்ளனர், 70 பேர் காயமடைந்துள்ளனர்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் காவல்துறையினர் வரவழைக்க பட்டுள்ளனர்.
15 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக், தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளதோடு , இளைஞர்கள் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
VERY SAD EVENTS IN LEH
— Sonam Wangchuk (@Wangchuk66) September 24, 2025
My message of peaceful path failed today. I appeal to youth to please stop this nonsense. This only damages our cause.#LadakhAnshan pic.twitter.com/CzTNHoUkoC
மேலும், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வீதிக்கு வந்துள்ளனர். இது இளைஞர்களின் கோபம். இது ஒரு Gen Z புரட்சி. 5 ஆண்டுகளாக அவர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இது அவர்களை வீதிக்கு வர வைத்துள்ளது. அரசாங்கம் லடாக்கிற்கு எந்த பாதுகாப்பும் வழங்கவில்லை." என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக வரும் அக்டோபர் 6 ஆம் திகதி, ALB மற்றும் KTA அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |