மக்களுக்கு செய்யும் வேலைகளை பாருங்கள்.., பவன் கல்யாணை எச்சரித்த நடிகர் பிரகாஷ் ராஜ்
திருப்பதி லட்டு விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் பவன் கல்யாண் இடையே வார்த்தை போர் நிலவி வருகிறது.
லட்டு விவகாரம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டில் மாட்டிறைச்சியின் கொழுப்பு சேர்க்கப்படுவது உறுதியான சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியது.
நடிகர் கார்த்தி நடித்த மெய்யழகன் திரைப்படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது நடிகர் கார்த்தியிடம் உங்களுக்கு லட்டு வேணுமா? என தொகுப்பாளர் கேட்டார்.
அதற்கு அவர், "லட்டு குறித்து நாம் இங்கு பேச வேண்டாம். அது உணர்ச்சிமிகுந்த விடயம். லட்டு வேண்டாம், தவிர்த்துவிடுவோம்" என்றார்.
இந்த சம்பவத்திற்கு நடிகரும், ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், "சனாதான தர்மம் என வரும்போது பேசும் வார்த்தையை நூறுமுறை யோசித்து பேச வேண்டும்" என்றார். இந்த விவாகரம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக பேசப்பட்டது.
பின்னர் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "அன்புள்ள பவன் கல்யாண் சார். உங்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். நான் பேசியது எதாவது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன்" என்று கூறியிருந்தார்.
இதனிடையே, லட்டுவின் புனித தன்மையை மீட்டெடுக்க துணை முதலமைச்சர் பவன் கல்யான் 11 நாள் விரதம் இருந்து வருகிறார். அவர் கோவிலின் படிக்கட்டுகளை சுத்தம் செய்யும் வீடியோக்களும் பரவி வருகின்றன.
பிரகாஷ் ராஜ் பதிலடி
இது தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது கருத்துக்களை கூறி கண்டனத்தை தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த பவன் கல்யாண், "நான் சனாதன தர்மத்தில் தீவிரமாக இருக்கிறேன். இஸ்லாம் போன்ற பிற மதங்களிலும் இதே போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் போராட்டம் நடத்தப்படும்.
என்னை ஏன் விமர்சிக்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. பிரகாஷ் ராஜ் பாடம் கற்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் தனது பதிவில், "புதிய பக்தர் இல்லையா ? இனி போதும். மக்களுக்காக செய்ய வேண்டிய வேலைகளை பார்க்கவும்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |