100 கிராம் வெண்டைக்காய் சாப்பிடுவதால் நடக்கும் எண்ணிலடங்காத நன்மைகள்
பச்சை பசேல் என அழகான நிறத்தில் இருக்கும் வெண்டைக்காய் சுவையான காய்கறி மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட!
பலரும் விரும்பி சுவைக்கும் வெண்டைக்காயை அடிக்கடி சாப்பிடுவதால் உடலில் பல அற்புதங்கள் ஏற்படுகின்றது.
கெட்ட கொழுப்பை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் வெண்டைக்காயை தாராளமாக சாப்பிடலாம்.
ஏனெனில் வெறும் 100 கிராம் வெண்டைக்காயில் 66 கலோரிகளே உள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
வெண்டைக்காயில் உள்ள அந்த வழவழப்புத் திரவம் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் ஆசிட் வெண்டைக்காயில் இருக்கிறது. எனவே கர்ப்பிணிகள் அதன் வழவழப்பு திரவம் குறையாமல் வாரம் 2 முறையேனும் சமைத்து சாப்பிடலாம்.
சர்க்கரை நோய், மலச்சிக்கல், புற்றுநோய், அனீமியா, பார்வைக் குறைபாடு, வயிற்றுப் புண் என பல நோய் , உடல் உபாதைகளுக்கும் வெண்டைக்காய் சிறந்த துணையாக உள்ளது.
வயதாகும் பலருக்கும் ஞாபக மறதி ஏற்படுவது இயற்கை தான். மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும், அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வருவதால் ஞாபக சக்தியை அதிகம் பெற முடியும்.
அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் சிலருக்கு கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இந்த பிரச்னையை சரி செய்வதில் வெண்டைக்காய் சிறப்பாக செயல்படுகிறது. தினமும் உணவின் போது வெண்டைக்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நன்கு செயல்பட தொடங்கும்.