வருங்கால கணவரை கைது செய்த பெண் SI: அதிரடி சம்பவம்

Assam
By Fathima May 06, 2022 03:59 PM GMT
Report

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமானவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில் வருங்கால கணவரை அசாம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள நாகோன் மாவட்ட போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவபர் ஜூன்மோனி ரபா. இவருக்கும் ராணா போகாக் என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறிய நிலையில் ராணா போகாக் மற்றும் ஜூன்மோனி ரபா ஆகியோருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமண நிச்சயத்தார்த்தம் நடந்தது. இவர்கள் 2 பேரின் திருமணம் இந்த ஆண்டு நவம்பரில் நடைபெற உள்ளது.


இதையடுத்து இவர்கள் 2 பேரும் செல்போனில் பேசினர். ராணா போகாக் நடத்தையில் அவருக்கு சந்தேகம் எழுந்தது. இதுபற்றி ஜூன்மோனி ரபா விசாரிக்க துவங்கினார். அப்போது அவர் ஒஎன்ஜிசி நிறுவனத்தில் வேலை செய்வதாக போலியாக தெரிவித்தது தெரியவந்தது.

மேலும் ஓஎன்ஜிசி நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றுவதாக கூறி வேலை வாங்கி தருவதாக உறுதியளித்து ஏராளமானவர்களிடம் பணம் வசூலித்துள்ளார்.

இவ்வாறாக அவர் பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக 3 பேர் ஜூன்மோனி ரபாவிடம் கூறினர். இதையடுத்து ராணா போகாக் மீது ஜூன்மோனி ரபா வழக்குப்பதிவு செய்தார். தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தார்.

வருங்கால கணவரை கைது செய்த பெண் SI: அதிரடி சம்பவம் | Lady Cop Arrest Her Fiance

இந்நிலையில் இன்று ராணா போகாக்கை, ஜூன்மோனி ரபா கைது செய்தார். இவரிடம் இருந்து போலியான முத்திரைகள் உள்ளிட்ட சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுபற்றி ஜூன்மோனி ரபா கூறுகையில், ‛‛எனக்கு சந்தேகம் வந்த நிலையில் சில முக்கிய தகவல்களை மூன்று பேர் அளித்தனர். இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றி சொல்கிறேன்'' என்றார்.தனக்கு நிச்சயிக்கப்பட்ட ராணா போகாக்கை கைது செய்துள்ள ஜூன்மோனி ரபா நேர்மையான போலீஸ் அதிகாரியாக பெயர் பெற்றவர்.

கடந்த ஜனவரி மாதம் இவர் செய்தித்தாள்களில் தலைப்பு செய்தியாக வந்திருந்தார். அதாவது பிரம்மபுத்திரா ஆற்றில் சட்டவிரோதமாக படகு இயக்கிய வழக்கு விசாரணையில் இருந்து விலகும்படி பிபுரியா தொகுதி எம்எல்ஏ அமியா குமார் புயான் கூறியதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பான ஆடியோ அப்போது வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வருங்கால கணவரை கைது செய்த பெண் SI: அதிரடி சம்பவம் | Lady Cop Arrest Her Fiance

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US