வீட்டில் வெண்டைக்காய் இருந்தால் போதும்... சுவையான வறுவல் செய்யலாம்!
பொதுவாகவே அனைவருக்கும் காய்கறி வைத்து செய்யும் அனைத்து விதமான உணவுப் பொருட்களும் பிடிக்கும்.
அதிலும் வறுவல் சுவையில் செய்தால் பிடிக்காத காய்கறியையும் பலர் சாப்பிடுவார்கள். அந்தவகையில் வெண்டைக்காய் வைத்து எப்படி சுவையான வறுவல் செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெண்டைக்காய் - 1 கிலோ
- கடலை மாவு - 1/4 கப்
- அரிசி மாவு - 1/4 கப்
- சோள மாவு - 1 மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
- தனியா தூள் - 1 தேக்கரண்டி
- சீரக தூள் - 1 தேக்கரண்டி
- உப்பு - 1 தேக்கரண்டி
- எண்ணெய் - பொரிப்பதற்கு
- முந்திரி பருப்பு, வேர்க்கடலை
- பச்சை மிளகாய் - 6 நீளவாக்கில் நறுக்கியது
- கறிவேப்பிலை பூண்டு - 5 தோலுடன் இடித்தது
செய்முறை
1. வெண்டைக்காயை கழுவி சிறிய துண்டுகளாக வெட்டவும்.
2. பின்பு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து வெண்டைக்காய் துண்டுகளுடன் சேர்த்து கலக்கவும்.
3. பிறகு சிறிதளவு தண்ணீர் தெளித்து கலந்து 5 நிமிடம் ஊறவிடவும்.
4. ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி வெண்டைக்காயை துண்டுகளை போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
5. அடுத்து ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி முந்திரி, வேர்க்கடலை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இடித்த பூண்டு ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும்.
6. வறுத்த அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து வறுத்து வைத்த வெண்டைக்காய் உடன் சேர்த்து கலக்கவும்.
7. சுவையான வெண்டைக்காய் ப்ரை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |