எலிசபெத் ராணியாருக்குப் பிறகு ராணுவத்தில் இணையும் முதல் பிரித்தானிய இளவரசி
பிரித்தானிய ராஜ குடும்பத்திலிருந்து மீண்டும் ஒரு இளவரசி ராணுவத்தில் இணைய முடிவு செய்துள்ளார்.
ராணுவத்தில் இணையும் முதல் பிரித்தானிய இளவரசி
1945ஆம் ஆண்டு, முன்னாள் பிரித்தானிய மகாராணியான எலிசபெத் இளவரசியாக இருந்தபோது ஒரு ஜூனியர் கமாண்டராக ராணுவத்தில் பணியாற்றினார்.
Credit: Splash
அதற்குப் பின் எந்த பிரித்தானிய இளவரசியும் ராணுவத்தில் இணையவில்லை.
இந்நிலையில், தற்போது இளவரசி Lady Louise Windsor (21), தன் பாட்டியாரைப் பின்பற்றி ராணுவத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Credit: Splash
அரியணையேறும் வரிசையில் 16ஆவது நபராக இருக்கும் லூயிஸ், தான் படிக்கும் செயின் ட் ஆண்ட்ரூஸ் பல்கலையில், University Officer Training Corps (UOTC) என்னும் எதிர்கால ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சியில் இணைந்துள்ளார்.
இளவரசி லூயிஸ், ராணுவ சீருடையில் துப்பாக்கி ஏந்தி நிற்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Credit: Topical Press Agency - Getty Images
லூயிஸ், எடின்பர்க் கோமகனான இளவரசரும், மன்னர் சார்லசின் தம்பியுமான எட்வர்ட், மற்றும் இளவரசி சோபி தம்பதியரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: Camera Press
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |