உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைக்க வேண்டுமா? இந்த ஒரு காய் மட்டும் சாப்பிடுங்க
டைப் 2 நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அந்த வகையில், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மையளிக்கும் வெண்டைக்காயை கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆய்வின்படி, வெண்டைக்காய் இரத்த சர்க்கரையை குறைப்பதில் சாதகமான விளைவைக் கொண்டுள்ளதாகக் கூறுகிறது.
வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட் ,கொழுப்பு ,புரதம், விட்டமின் ஏ ,விட்டமின் சி ,வைட்டமின் ஈ,வைட்டமின் கே ,கால்சியம் ,இரும்பு சத்து உள்ளன.
மேலும் சர்க்கரை ,அனிமியா ,ஆஸ்துமா, கொலஸ்ட்ரால் ,மலச்சிக்கல் ,புற்றுநோய் ,வயிற்றுப்புண் ,பார்வை குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் சக்தி உள்ளன.
இரத்த சர்க்கரை அளவை குறைக்க வெண்டைக்காய்
குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ள இந்த காய், விரைவான சர்க்கரை அதிகரிப்பை தடுப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதை மெதுவாக்க உதவுகிறது. இது உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
வெண்டைக்காயில் குர்செடின் மற்றும் கேடசின்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை உயர் இரத்த சர்க்கரை அளவுகளால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவும்.
வெண்டைக்காய் உங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தலாம். இன்சுலினை மிகவும் திறம்பட பயன்படுத்த இந்த காய் உங்கள் உடலுக்கு உதவுகிறது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது முக்கியம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவில் வெண்டைக்காயை நீங்கள் எப்போதும் சேர்த்துக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |