டி20 உலகக்கோப்பை தொடர்! களத்தில் மோதி கொண்ட இலங்கை வீரர் குமார, வங்கதேச வீரர் தாஸுக்கு அபராதம்... ஐசிசி அதிரடி
உலகக்கோப்பை டி20 தொடரின் போட்டியின் போது ஐசிசி நடத்தை விதிகளை மீறியதற்காக இலங்கை வீரர் உட்பட இரண்டு வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதிய போட்டி நேற்று நடந்த நிலையில் இலங்கை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இலங்கை பந்துவீச்சாளர் லஹிரு குமார பந்துவீச்சில் வங்கதேச பேட்ஸ்மேன் லிடன் தாஸ், ஷனகாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இதன்பின்னர் களத்தில் குமார, தாஸ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது, பின்னர் பீல்டிங்கில் இருந்த மற்ற இலங்கை வீரர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி பிரித்துவிட்டனர்.
இந்த நிலையில் நிலையில் இப்போட்டியின் போது ஐசிசி நடத்தை விதிகளை மீறியதற்காக இரண்டு பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி லஹிரு குமாரவுக்கு அவரது போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு 1 demerit புள்ளியையும் பெற்றார்.
அதே போல வங்கதேசத்தின் லிடன் தாஸ் அவரது போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 15% அபராதம் பெற்றுள்ளதோடு 1 demerit புள்ளியையும் பெற்றிருக்கிறார்.
Lahiru Kumara fined 25% of his match fee & received 1 demerit point, while Liton Das of Bangladesh fined 15% of his match fee & received 1 demerit point for breaching ICC Code of Conduct in yesterday's Match #BANvSL #LKA #SriLanka #T20WorldCup pic.twitter.com/JPbSoFj8xI
— Sri Lanka Tweet ?? ? (@SriLankaTweet) October 25, 2021