இலங்கைக்கு பெரிய அடி! நடைபெற்று வரும் வங்க தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து பிரபல வேகப்பந்து வீச்சாளர் விலகல்
Pallekele மைதானத்தில் நடைபெற்று வரும் வங்க தேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார தொடர்ந்து விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஏப்ரல் 21ம் திகதி Pallekele மைதானத்தில் தொடங்கியது.
இன்று 3வது நாள் வரை தொடர்ந்து விளையாடிய வங்க தேச அணி 541 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டிக்ளர் செய்தது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 100 ஓட்டங்களை கடந்து விளையாடி வருகிறது.
இந்நிலையில், பந்து வீச்சின் போது காயமடைந்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார நடைபெற்று வரும் வங்க தேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் தொடர்ந்து விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி Pallekele மைதானத்தில் ஏப்ரல் 2ம் திகதி தொடங்கும் வங்க தேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் லஹிரு குமார விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.