இலங்கை வீரரின் தாக்குதல் பந்துவீச்சு..பாகிஸ்தான் அணியை மீட்ட இருவர்
Pakistan allout for 325 vs sri lanka: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 325 ஓட்டங்கள் குவித்தது.
ராவல்பிண்டியில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 325 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ்
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது.
இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 98 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.
தொடக்க வீரர்கள் அஸான் அவைஸ் 47 ஓட்டங்களும், ஆரிஃப் 46 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய முகமது தாஹா (8), பாபர் அஸாம் (8) ஆகியோர் சொதப்பினர்.
அதனைத் தொடர்ந்து சாகிப் கான் 37 ஓட்டங்களும், ஷகீல் 24 ஓட்டங்களும், ஆகா 21 ஓட்டங்களும் எடுத்தனர். லஹிரு குமார, அசிதா பெர்னாண்டோவின் மிரட்டலான பந்துவீச்சில் பாகிஸ்தானின் விக்கெட்டுகள் சரிந்தன.
லஹிரு குமார அபாரம்
அப்போது கைகோர்த்த ரஸவுல்லா, காஸி கோரி கூட்டணி பாகிஸ்தான் அணியை 300 ஓட்டங்கள் கடக்க வைத்தது.

அரைசதம் விளாசிய காஸி கோரி (Ghazi Ghori) 54 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ரஸவுல்லா 42 (32) ஓட்டங்களில் கடைசி விக்கெட்டாக அவுட் ஆனார்.
பாகிஸ்தான் அணி 325 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. லஹிரு குமார 5 விக்கெட்டுகளும், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி, 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 74 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
