63 பந்தில் 132 ஓட்டங்கள்! LPL-யில் சம்பவம் செய்த இலங்கை வீரர்
காலி கல்லன்ட்ஸ் அணிக்கு எதிரான LPL போட்டியில், கண்டி ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லஹிரு உதார ருத்ரதாண்டவம்
காலி கல்லன்ட்ஸ் மற்றும் கண்டி ராயல்ஸ் அணிகள் மோதிய LPL 2026 டி20 போட்டி பல்லகெலேவில் நடந்தது.

முதலில் ஆடிய காலி கல்லன்ட்ஸ் அணி 208 ஓட்டங்கள் குவித்தது. சாம் ஹார்பர் 72 (38) ஓட்டங்களும், சரித் அசலங்கா 70 (32) ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் ஆடிய கண்டி ராயல்ஸ் அணியில் லஹிரு உதார (Lahiru Udara) ருத்ரதாண்டவம் ஆடினார்.
அவரது மிரட்டலான ஆட்டத்தின் மூலம் கண்டி ராயல்ஸ் 18.5 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இறுதிவரை களத்தில் இருந்த லஹிரு உதார 63 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 132 ஓட்டங்கள் விளாசினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |