பல லட்சம் கோடி நிறுவனத்தின் தலைவர்... விடுப்பே எடுக்காத உழைப்பு: அவரின் மொத்த சொத்து மதிப்பு
இந்தியாவில் பிரபலமான கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான Larsen and Toubro-வின் தலைவர் அனில் மணிபாய் நாயக் என்பவரே கடந்த 21 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பே எடுக்காமல் பணியாற்றி வருபவர்.
760 ரூபாய் சம்பளத்தில்
பள்ளிப்பருவத்தில் அரிதாகவே வகுப்பில் கலந்து கொண்ட மாணவரான அனில் மணிபாய் நாயக், நாளுக்கு 15 மணி நேரம் பணியாற்றும் உழைப்பாளியாக தம்மை மாற்றிக்கொண்டவர்.
குஜராத் மாக்நிலத்தில் பிறந்த அனில் மணிபாய் நாயக் பொறியியல் பட்டம் பெற்றவர். 1965ல் மாதம் 760 ரூபாய் சம்பளத்தில் உதவி பொறியாளராக நிறுவனம் ஒன்றில் இணைந்துள்ளார்.
ஆறே மாதத்தில் மேற்பார்வையாளர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளார். இந்த நிலையில் இரண்டு முறை முயற்சித்து L&T நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த அவர், 1999ல் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தெரிவானார்.
வருவாயில் 75 சதவீதத்தை தொண்டு நிறுவனங்களுக்கு
தொடர்ந்து 2017ல் குழு தலைவராக பொறுப்பேற்றார். 2017-2018ல் தமது தொழிலில் இருந்து மட்டும் 137 கோடி ரூபாய் தொகையை அனில் நாயக் சம்பாதித்துள்ளார், அத்துடன் விடுப்பு எடுக்காமல் பணியாற்றியதால் ரூ.19 கோடி அளவுக்கு L&T நிறுவனம் அவருக்கு அளித்துள்ளது.
ஆனால் 2016ல் தமது மொத்த வருவாயில் 75 சதவீதத்தை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்துள்ளார் அனில் நாயக். மட்டுமின்றி, 2022ல் மட்டும் ரூ.142 கோடி தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்து நாட்டின் முதல் 10 நன்கொடையாளர்கள் வரிசையில் இணைந்தார்.
மேலும், ரூ.171.3 கோடிக்கு மேல் நிகர மதிப்புள்ள 9 பங்குகளை நாயக் பகிரங்கமாக வைத்திருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 60 ஆண்டுகள் L&T நிறுவனத்தில் பணியாற்றியுள்ள நாயக், எதிர்வரும் செப்டம்பர் 30ம் திகதி ஓய்வு பெறுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |