அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 240 ஓட்டங்கள் விளாசிய 17 வயது வீரர்
Lakshya rajesh raichandani 240 runs vs australia: இந்தியா U19 வீரர் லக்ஷ்யா ராஜேஷ் ராய்சந்தனி அவுஸ்திரேலியா U19 அணிக்கு எதிராக 240 ஓட்டங்கள் விளாசினார்.
ராஜ்கோட்டில் நடந்து வரும் அவுஸ்திரேலியா U19 அணிக்கு எதிரான டெஸ்டில், இந்தியா U19 அணி 494 ஓட்டங்கள் குவித்தது.
பிளாக் கேட்டில் 102 ஓட்டங்கள்
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா U19 அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸை ஆடிய அவுஸ்திரேலியா 217 ஓட்டங்களுக்கு சுருண்டது. பிளாக் கேட்டில் 102 ஓட்டங்கள் குவித்தார். இஷான் ஓம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில், தொடக்க வீரர் லக்ஷ்யா ராஜேஷ் ராய்சந்தனி (Lakshya Rajesh Raichandani) மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
லக்ஷ்யா இரட்டைசதம்
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி லக்ஷ்யா இரட்டைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 473 ஆக உயர்ந்தபோது லக்ஷ்யா ராஜேஷ் 240 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 24 பவுண்டரிகள்) குவித்து ஆட்டமிழந்தார்.
கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்த மோஹித் உல்வா 84 பந்துகளில் 92 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 10 பவுண்டரிகள்) விளாசினார்.
இதன்மூலம் இந்தியா U19 அணி 494 ஓட்டங்கள் குவித்தது. கேஸி பார்டன் 3 விக்கெட்டுகளும், தியோ சிங்கோஸ் மற்றும் ஸ்பென்சர் கிரீன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
[7SMBA8 ]