மதுபானம் விற்று ரூ.23000 கோடி சாம்ராஜியத்தை உருவாக்கிய இந்தியர் - எப்படி தெரியுமா?
உலக முழுவதிலும் சுமார் 85 நாடுகளுக்கு மதுபானம் விற்று ரூ.23000 கோடி சாம்ராஜியத்தை உருவாக்கியவர் தான் லலித் கைதான்.
81 வயதான லலித் கைதான் இந்தியக் கோடீஸ்வரர்களில் ஒருவர்.
கொல்கத்தாவைச் சேர்ந்த லலித் கைதான், கொல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியிலும், அஜ்மீரில் உள்ள மாயோ கல்லூரியிலும் தனது படிப்பை முடித்தார்.
பின் பெங்களூரில் உள்ள P.M.S பொறியில் கல்லூரியில் பொறியியல் இளங்கலைப் பட்டம், அமெரிக்காவின் ஹார்வர்டில் நிர்வாக நிதி மற்றும் கணக்கியல் படிப்பை படித்து முடித்துள்ளார்.
பின் டெல்லியில் இருக்கும் Radico Khaitan என்ற பிரபல நிறுவனத்திற்கு தலைவரானார்.
Radico Khaitan நிறுவனம்
இந்நிறுவனத்தில் மேஜிக் மொமென்ட்ஸ், 8PM பிரீமியம் விஸ்கி, ராம்பூர் இந்தியன் சிங்கிள் மால்ட் விஸ்கி, ரீகல் டலோன் விஸ்கி என இவரது நிறுவன தயாரிப்புகள் மது அருந்துவர்களின் மத்தியில் பிரபலமானதாகும்.
இந்த மதுபானங்களானது சொந்த நாட்டில் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள 85 க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டெல்லியில் இருக்கும் Radico Khaitan நிறுவனமானது தற்போது சுமார் 23000 கோடி ரூபாய் மதிப்பைக் கொண்டுள்ளது.
80 வயதான லலித் கைதான், இந்தியாவின் கோடீஸ்வரராகவும் ஆனார், மொத்த சொத்து மதிப்பு $1 பில்லியன் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |