பிரித்தானிய குடியுரிமை பெற்று விட்டதாக லலித் மோடி அறிவிப்பு
Lalit modi announce he has obtained British citizenship: ஐபிஎல் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி பிரித்தானியாவில் குடியுரிமை பெற்று இருப்பதாக அறிவித்துள்ளார்.
பிரித்தானிய குடியுரிமை பெற்ற லலித் மோடி
IPL தொடரை உருவாக்கியதில் முக்கியமான நபர்களில் ஒருவராக கருதப்படும் லலித் மோடி பிரித்தானிய குடியுரிமை பெற்று விட்டதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தன்னுடைய X தள பக்கத்தில் அவர் வெளியிட்டு இருந்த கருத்தில், 2026 நவம்பர் 14ம் திகதி ஆக்ஸ்போர்டு யூனியனில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது.
என்னுடைய வாழ்வில் முக்கியமான மற்றும் தனிப்பட்ட நிகழ்வு ஒன்றை இப்போது பொதுவெளியில் பகிர்ந்து கொள்கிறேன்.

நான் பிரித்தானிய குடிமகனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து செப்டம்பர் 15ம் திகதி எனக்கு பிரித்தானிய குடியுரிமை கிடைத்ததை சிறப்பாக கொண்டாடினேன் என்று தெரிவித்துள்ளார்.
அந்த தருணம் என்னுடைய வாழ்வில் எப்போதும் நீங்காத ஒன்றாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா பல ஆண்டுகளாக என்னுடைய இல்லமாக இருந்து வருகிறது. இங்குள்ள மக்கள், பாரம்பரியங்கள் மற்றும் மதிப்புகள் மீது ஆழமான மரியாதை கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய குடியுரிமை என்பது சிறப்புரிமை மட்டுமின்றி, அது ஒரு பொறுப்பும் கூட என லலித் மோடி தெரிவித்துள்ளார்.
பெருமை மற்றும் நன்றியுடனுடன் இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக லலித் மோடி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
லலித் மோடி 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலை காரணமாக கொண்டு ஐபிஎல் தொடரை தென்னாப்பிரிக்காவில் நடத்தினார்.
இதையடுத்து அவர் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு அன்னியச் செலாவணி பரிமாற்றம் செய்ததாக கூறி அமலாக்கத்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. அப்போது இந்தியாவில் இருந்து வெளியேறி லலித் மோடி பிரித்தானியாவில் குடியேறியது குறிப்பிடத்தக்கது.