சரும நிறத்தை அதிகரிக்கும் ஆட்டுப்பால்! இதனுடன் கலந்து பயன்படுத்தி பாருங்க
பொதுவாக ஆட்டுப்பால் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி அது சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது.
ஆட்டுப்பால் பயன்படுத்தும் போது சருமத்திற்கு எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. நேரடியாக ஆட்டுப்பால் எல்லா நேரத்திலும் பயன்படுத்த முடியாது.
அந்தவகையில் சரும நிறத்தை அதிகரிக்க ஆட்டுப்பாலை எதனுடன் சேர்த்துப்பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- ஆட்டுப் பால் - 2 மேசைக்கரண்டி
- கடலை மாவு - 1 தேக்கரண்டி
- பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை
முதலில் ஒருது பௌலில் ஆட்டுப் பால் மற்றும் கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, முகத்தில் தடவ வேண்டும்.
15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஆட்டுப் பால், பேக்கிங் சோடா மற்றும் கடலை மாவு போன்றவை சருமத்தைப் பெற உதவும் சிறப்பான பொருட்கள். ஆட்டுப் பால் சருமத்திற்கு மென்மை அளிக்கும், கடலை மாவு மற்றும் பேக்கிங் சோடா இறந்த செல்களை நீக்கி, சரும நிறத்தை அதிகரித்துக் காட்ட உதவும்.