Lamborghini Temerario Tettonero Capsule அறிமுகம்: உலகளவில் 499 கார்கள் மட்டுமே தயாரிப்பு
Lamborghini Temerario Tettonero Capsule Revealed, Limited To 499 Units Globally: இத்தாலிய சொகுசு சூப்பர் கார் தயாரிப்பாளரான Lamborghini தனது புதிய சிறப்பு பதிப்பான Temerario Tettonero Capsule மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகளவில் வெறும் 499 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்படவுள்ள இந்த மாடல், தனித்துவமான வடிவமைப்பு மற்றும் பிரத்யேக உட்புற அம்சங்களுடன் வெளியாகியுள்ளது.

இந்த சிறப்பு பதிப்பு, லம்போர்கினியின் V8 பிளக்-இன் ஹைபிரிட் சூப்பர் காரான டெமெராரியோவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் வடிவமைப்பு பிரிவான Centro Stile இதனை வடிவமைத்துள்ளது. வழக்கமான மாடலுடன் ஒப்பிடும்போது இயந்திர அமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பில் கூடுதல் தனிச்சிறப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த காரின் முக்கிய சிறப்பு அதன் இரட்டை வண்ண (Two-Tone) வெளிப்புற அலங்காரமாகும். Nero Noctis கருப்பு நிறத்துடன் Giallo Inti, Arancio Xanto, Blu Cepheus, Verde Scandal மற்றும் Viola Pasifae உள்ளிட்ட ஐந்து நிறங்களில் ஒன்றை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.
கார் முன்புறம், ரூஃப், பின்புற டிஃப்யூசர், கண்ணாடிகள் மற்றும் சக்கரங்களில் கருப்பு நிற அலங்காரம் இடம்பெற்றுள்ளது. உட்புறத்தில் Nero Ade அப்ஹோல்ஸ்ட்ரி, Grigio Octans நிற stictch, Hexagonal வடிவமைப்புள்ள இருக்கைகள் மற்றும் Tettonero பிராண்டிங் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு காரிலும் அதன் வரிசை எண்ணை காட்டும் Matt Carbon அடையாள பலகையும் பொருத்தப்பட்டுள்ளது.

செயல்திறன்:
4.0 லிட்டர் ட்வின்-டர்போ V8 என்ஜின் மற்றும் மூன்று மின்மோட்டார்கள் இணைந்து மொத்தம் 920 CV சக்தியை உருவாக்குகின்றன. இந்த கார் 0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 2.7 வினாடிகளில் எட்டக்கூடியதாகும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 343 கிலோமீட்டர் ஆகும். 3.8 kWh பேட்டரி மூலம் சுமார் 8 கிலோமீட்டர் வரை முழுமையான மின்சார இயக்கத்தையும் வழங்குகிறது.
இந்தியாவில் வழக்கமான டெமெராரியோ மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டெட்டோநெரோ கேப்சூல் பதிப்பின் இந்திய விலை மற்றும் கிடைக்கும் எண்ணிக்கை குறித்து நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |