எம்பாபேயின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த 18 வயது வீரர்
லாமின் யமல் சாம்பியன்ஸ் லீக் தொடரில் கைலியின் எம்பாபேயின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார்.
லாமின் யமல்
எய்ன்ட்ராச்ட் பிராங்க்பியூர்ட் அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. 
ஜூல்ஸ் கௌண்டே இரண்டு கோல்களையும் (50, 53வது நிமிடங்கள்) அடித்தார். பார்சிலோனாவின் 18 வயது வீரரான லாமின் யமல் கோல் அடிக்க உதவிபுரிந்தார்.
இதன்மூலம் அவர் கைலியன் எம்பாபேயின் அபார சாதனையை முறியடித்தார்.
அதாவது, லாமின் யமல் 14 கோல் பங்களிப்புகள் செய்துள்ளார். இதில் 7 கோல்கள் அடங்கும். 
வரலாறு
இதற்கு முன் கைலியன் எம்பாபே 13 முறை கோல் பங்களிப்புகள் செய்திருந்தார்.
உலகின் மிக முக்கியமான சாம்பியன்ஸ் லீக் கிளப் போட்டியில் இந்த சாதனையை 18 வயதில் செய்து லாமின் யமல் (Lamine yamal) வரலாறு படைத்துள்ளார். 
அதேபோல் வரவிருக்கும் போட்டிகளிலும் சில சாதனைகளை யமல் முறியடிக்க உள்ளார். அவர் 4 கோல்கள் அடிக்க வேண்டும்.
அவ்வாறு கோல்கள் அடிக்கும் பட்சத்தில், சிறிய வயதில் அதிக கோல்கள் (10) என்ற எம்பாப்பேயின் சாதனையையும் முறியடிப்பார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |