பிரான்ஸ் எங்களைப் பார்த்து பயப்பட வேண்டும்: ஸ்பெயின் வீரர் லமின் யமால்
ஸ்பெயின் அணி வீரர் லமின் யமால் அரையிறுதியில் பிரான்ஸைக் கண்டு பயப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
முதல் அரையிறுதி
டல்லாஸ் மைதானத்தில் நடைபெற உள்ள FIFA உலகக்கிண்ண முதல் அரையிறுதியில், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்தப் போட்டி குறித்து, வளர்ந்து வரும் ஸ்பெயின் வீரரான லமின் யமால் (Lamine Yamal) "உலகக்கிண்ணம் தொடங்கியதில் இருந்து அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஆட்டம் இது" என்று குறிப்பிட்டார்.
அத்துடன் "யூரோ கிண்ணப் போட்டிக்கு பிறகு அவர்கள் (பிரான்ஸ்) எங்களை தோற்கடித்ததில்லை. அவர்கள் எங்களை விட சிறந்தவர்களாக இருக்க முடியாது" என்றும் தெரிவித்தார்.
நாங்கள்தான்
மேலும் யமால், என்னைப் பொறுத்தவரை, உலகக்கிண்ணப் போட்டியில் உள்ள சிறந்த இரண்டு அணிகள் நாங்கள்தான்; ஆனால் எங்களுக்கு சிறிதும் பயமில்லை.
பிரான்ஸ் அணியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளக்கூடிய ஒரு அணி இருக்கிறது என்றால், அது நாங்கள்தான் என்று நான் கருதுகிறேன்.
நாங்கள் எங்களுக்குத் தெரிந்த பாணியிலேயே விளையாடுவோம்; பந்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் முயற்சிப்போம் என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |