கருணை கொலை செய்யப்பட்ட XL புல்லி இன நாய்! மன்னிப்பு கேட்ட பிரித்தானிய பொலிஸார்
பிரித்தானியாவில் நிர்வாக பிழை காரணமாக XL புல்லி இன நாய் கருணை கொலை செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
மன்னிப்பு கோரிய பொலிஸார்
நிர்வாக பிழையால் தவறுதலாக XL புல்லி இன நாயான புருனோ-வை(Bruno) கருணை கொலை செய்ததை அடுத்து அதன் உரிமையாளரின் குடும்பத்திடம் லங்காஷயர் பொலிஸார் மனமார்ந்த மன்னிப்பு கோரியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆபத்தான நாய்கள் சட்டத்தின் கீழ் XL புல்லி இன நாயான புருனோ பறிமுதல் செய்யப்பட்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
குடும்பத்தினர் புருனோவை வைத்திருக்க விதிவிலக்கு கோருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், எதிர்பாராத நிர்வாக தவறுதலின் காரணமாக நாய் புருனோ நீதிமன்ற விசாரணைக்கு முன்பு கருணை கொலை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம் மற்றும் மீண்டும் நிகழாமல் தடுக்க உடனடியான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளது.\
இந்நிலையில் Morecambe மற்றும் Lunesdale எம்.பி Lizzi Collinge, இந்த செய்தியால் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் இத்தகைய தவறு ஒருபோதும் நடக்கக்கூடாது என்றும், புருனோவின் மரணம் சூழ்ந்த சூழ்நிலைகளைப் பற்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |