மன்னர் சார்லஸ் இனி பல மில்லியன் பவுண்டுகள் வரி செலுத்த வேண்டாம்: பாதுகாக்கும் பிரித்தானிய சட்டம்
ராணியார் பிரித்தானிய அரசுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
அமுலில் இருக்கும் சட்டப்படி, அவ்வாறான சொத்துக்களுக்கு 40% வாரிசுரிமை வரி செலுத்த வேண்டும்.
பிரித்தானிய ராணியார் காலமானதையடுத்து அவரது சொத்துகளுக்கு மன்னர் சார்லஸ் வாரிசு என்பதால், செலுத்த வேண்டிய வாரிசுரிமை வரியானது, அமுலில் இருக்கும் சட்டம் காரணமாக செலுத்த தேவையில்லை என கூறப்படுகிறது.
ராணியார் இரண்டாம் எலிசபெத் கடந்த வாரம் காலமானதை அடுத்து, அவரது 652 மில்லியன் மதிப்பிலான லான்காஸ்டர் தோட்டமானது இனி முதல் மன்னர் சார்லஸ் பெயருக்கு மாற்றப்படும்.
@PA
பிரித்தானியாவில் அமுலில் இருக்கும் சட்டப்படி, அவ்வாறான சொத்துக்களுக்கு 40% வாரிசுரிமை வரி செலுத்த வேண்டும். ஆனால், 1993ல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய சட்டம் காரணமாக மன்னர் மூன்றாம் சார்லஸ் வாரிசுரிமை வரி செலுத்த தேவையில்லை.
ராணியாரிடம் இருந்து அவரது மறைவுக்கு பின்னர் நாட்டின் புதிய மன்னர் சொத்துக்களை பெற்றுள்ளதால் சட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 652 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான லான்காஸ்டர் தோட்டத்தில் இருந்து ஆண்டுக்கு 24 மில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டப்படுகிறது.
@reuters
பொதுவாக ராணியார் பிரித்தானிய அரசுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் 1993ல் இருந்தே தாமாகவே முன்வந்து ராணியார் வருமான வரி செலுத்தி வருகிறார்.
மன்னர் சார்லஸும் வரி செலுத்த முன்வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்ன்வால் எஸ்டேட் தொடர்பில் முன்னர் சார்லஸ் வரி செலுத்தி வந்துள்ளார். குறித்த தோட்டம் தற்போது இளவரசர் வில்லியன் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.
@PA
மன்னர் சார்லஸ் விடுத்து, அரச குடும்பத்தில் எவரொருவர் ராணியாரின் சொத்தில் பங்கு பெற்றால், அதற்கான வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.