இலங்கையின் நடவடிக்கைகள் தொடர்பில் பிரித்தானியா மனித உரிமைகள் தூதுவர்
நிலம் திருப்பிக் கொடுத்தல், நீண்டகால தடுப்புக்காவல் மற்றும் ஊழல் போன்ற பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை துவக்கியுள்ள நடவடிக்கைகளை வரவேற்பதாக பிரித்தானிய மனித உரிமைகள் தூதுவர் தெரிவித்துள்ளார்.
The Sri Lanka Core Group Countries
மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக, இலங்கை முக்கிய குழு (The Sri Lanka Core Group countries) என்னும் அமைப்பின் சார்பில், பிரித்தானிய மனித உரிமைகள் தூதுவரான Rita French அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
The Sri Lanka Core Group countries என்பது, கனடா, மலாவி, மொண்டெனேக்ரோ, வடக்கு மாசிடோனியா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய அமைப்பாகும்.
பிரித்தானிய மனித உரிமைகள் தூதுவரின் அறிக்கை
பிரித்தானிய மனித உரிமைகள் தூதுவரான Rita வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலம் திரும்பப் பெறுதல், நீண்டகால தடுப்புக்காவல் மற்றும் ஊழல் போன்ற பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை துவக்கியுள்ள நடவடிக்கைகளை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
அனைத்து இன மற்றும் மத சமூகங்களிலிருந்தும் அனைத்து இலங்கையர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு செயல்முறையைத் தொடங்குவதற்கு இந்த நடவடிக்கைகள் அடிப்படையாக அமைய இயலும் என்று கூறியுள்ள Rita, அதே நேரத்தில், இலங்கை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து கவலையடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுவதற்கான ஒரு தொடர்ச்சியான முயற்சியை வரவேற்கும் அநே நேரத்தில், அந்த பயங்கரவாத சட்டம் சர்வதேச விதிகளுக்கிணங்க அமைவதை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரத்தை பாதுகாக்க கோரிக்கை
கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ள Rita, நல்லிணக்கத்திற்கான தன் உறுதிப்பாட்டை இலங்கை முன்னெடுத்துச் செல்லும்போது, எடுக்கும் நடவடிக்கைகள் வெளிப்படையானதாகவும், பொறுப்புடையதாகவும், இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேர்தல் முறைமைகளில் வாக்காளர்களின் நம்பிக்கையைப் பேணுவதன் மூலமும் அதன் நிறுவனங்கள் மற்றும் ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதன் மூலமும் இலங்கை தனது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ள அவர்,
உயர்ஸ்தானிகர் மற்றும் அவரது அலுவலகத்துடன் இணைந்து செயலாற்றுமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளதுடன், மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |