ஃபார்முலா F1 கார் பந்தயம்: முதல் சாம்பியன்ஷிப் வென்றார் லாண்டோ நோரிஸ்
ஃபார்முலா F1 கார் பந்தயத்தில் லாண்டோ நோரிஸ் தனது முதல் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
முதல் F1 சாம்பியன்ஷிப்
அபுதாபியில் நடைபெற்ற விறுவிறுப்பான ஃபார்முலா F1 கார் பந்தயத்தில் சாம்பியன்ஷிப் பட்டத்தை லாண்டோ நோரிஸ்(Lando Norris) முதல்முறையாக கைப்பற்றி அசத்தியுள்ளார்.

பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் லாண்டோ நோரிஸ் மூன்றாவது இடம் பிடித்ததை அடுத்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கான புள்ளிகளை லாண்டோ நோரிஸ் பெற்றார்.
லாண்டோ நோரிஸின் இந்த வெற்றி, அவரது மெக்லாரன் அணிக்கு இந்த சீசனை அற்புதமான ஒன்றாக மாற்றியுள்ளது.
மெக்லாரன் அணி ஏற்கனவே சிங்கப்பூரில் அக்டோபரில் நடைபெற்ற கான்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப்பை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

26 வயதான லாண்டோ நோரிஸ், ஃபார்முலா F1 கார் பந்தயத்தில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற 11வது பிரிட்டிஷ் வீரர் ஆவார்.
அதே போல 2020 க்கு பிறகு, சர் லூயிஸ் ஹாமில்டனுக்கு பிறகு F1 கார் பந்தயத்தில் சாம்பியன்ஷிப் பட்டத்தை பிரிட்டிஷ் வீரர் லாண்டோ நோரிஸ் ஆவார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |