வெளுத்து வாங்கும் கனமழை - பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை
Sri Lanka
Landslide In Sri Lanka
By Kirthiga
தீவின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல மாவட்டங்களில் பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கைகள் இன்று (14) மாலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் என NBRO இன் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தளை பிரதேச செயலகப் பிரிவு (DSD) மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு 2 ஆம் நிலை (Amber) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பின்வரும் பகுதிகளுக்கு நிலை 1 (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டது:
- பதுளை - எல்ல, பசறை, ஹாலி எல DSDகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
- கண்டி - மெடதும்பர DSDகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US