கன மழை, மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள் - அச்சத்தில் உறைந்த மக்கள்
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கன மழை எச்சரிக்கை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இலங்கையை அண்மித்துள்ள வளிமண்டலத் தாழ்வு நிலை காரணமாக தீவின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் அளவில் அதிக பலத்த மழை பெய்யக் கூடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மண்சரிவு அபாயம்
மேலும் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நான்கு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
இதன்படி, காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு பின்வரும் நிலை 2 (Amber) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- காலி – எல்பிட்டிய, நெலுவ, யக்கலமுல்ல மற்றும் நாகொட பிரதேச செயலாளர் பிரிவுகள் (D.S.D) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
- களுத்துறை – இங்கிரிய, ஹொரண, புலத்சிங்கள மற்றும் மத்துகம DSD மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
- மாத்தறை – பிடபெத்தர DSD மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
- இரத்தினபுரி- குருவிட்ட, இரத்தினபுரி, எலபாத, எஹலியகொட மற்றும் கலவான DSD மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |