27 சடலங்கள் மீட்பு..பலி எண்ணிக்கை 100 ஆக உயரலாம் என அதிர்ச்சி தகவல்..அதிகரிக்கும் பதற்றம்
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
கனமழையால் நிலச்சரிவு
மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டம் இர்சல் கிராமத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கினர். இதில் 22 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் 86 பேர் மாயமானதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் மீட்புப் பணியின்போது மேலும் 5 பேரின் சடலங்கள் கிடைத்துள்ளதால் பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது மீட்கப்பட்டுள்ள 5 சடலங்களில் மூன்று பேர் பெண்கள் என தெரிய வந்துள்ளது.
பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு
முதலில் 86 பேர் மயமானதாக கூறப்பட்ட நிலையில் ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனால் 81 பேர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
PTI
இதற்கிடையில் அமைச்சர் கிரிஷ் மகாஜன் கூறும்போது, பலி எண்ணிக்கை சுமார் 100 ஆக உயரலாம் என அதிர்ச்சி அளித்தார்.
இதனால் மாயமானவர்களின் நிலை அறியாமல் உறவினர்கள் சோகத்தில் உறைந்துள்ளனர்.
Reuters/Francis Mascarenhas
Reuters/Francis Mascarenhas
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |