கேரளாவில் ருத்ர தாண்டவமாடிய நிலச்சரிவு! 19 பேர் பலி.,மேலும் உயரலாம் என அச்சம்
இந்திய மாநிலம் கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 19 பேர் பலியாகியுள்ளனர்.
கனமழை
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துவருவதால் கேரளாவின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
நேற்று இரவு வயநாடு பகுதியில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. அதிகாலை 2 மணியளவிலும், 4.30 மணியளவிலும் என அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் பாலம் உடைந்து வெள்ளம் ஏற்பட்டது.
19 பேர் பலி
இதில் சுமார் 500 வீடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர். அவர்களில் இதுவரை 19 பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது.
ஆனால், பலரின் நிலை என்னவென்று தெரியாததால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
எனினும் பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகொப்டர் மூலம் மீட்கும் பணி துரிதகதியில் நடந்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |