சுவிஸில் மலைச்சரிவு! குடியிருப்பு பகுதியில் விழுந்த பாறைகள்: படங்கள் வெளியானது
சுவிட்சர்லாந்தின் Graubünden மாகாணத்தில் மலைச்சரிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையில் இருந்து சரிந்த பாறைகள் Felsberg கிராமத்தில் குடியிருப்புகளில் விழுந்துள்ளது. மலைச்சரிவு ஏற்பட்டதை Felsberg கிராம அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மலைச்சரிவில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை. எனினும், வீடுகள் மீது பாறைகள் விழுந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
காயங்கள் அல்லது சேதங்கள் குறித்த எந்த புகார்களும் தங்களுக்கு கிடைக்வில்லை என Graubünden பொலிஸ் செய்தித்தொடர்பாளர் Anita Senti கூறியுள்ளார்.
பாறைகள் வீட்டை சேதப்படுத்தியுள்ளது, மக்கள் யாரும் காயமடையவில்லை. அப்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருதாக Graubünden அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மலைச்சரிவு குறித்து புவியியலாளருடன் முதற்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாக அதிகாரி கூறியுள்ளார்.