வங்கதேசத்தின் வெற்றி வீடியோவை இதில் பதிவிடுவதா? அதிர்ந்து போன அவுஸ்திரேலியா பயிற்சியாளர்! ஊழியருக்கு நேர்ந்த நிலை!
வங்க தேச வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோவை கிரிக்கெட் அவுஸ்திரேலியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது தொடர்பில் அவுஸ்திரேலியா தலைமை பயிற்சியாளர் மற்றும் அணி மேலாளர் கடும் கோபமடைந்துள்ளனர்.
சமீபத்தில் வங்க தேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை4-1 என இழந்தது. கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வங்க தேசம் தொடரை கைப்பற்றுவது இதுவே முதல் முறை ஆகும்.
இந்நிலையில், cricket.com.au என்ற அவுஸ்திரேலிய இணையதளம், அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அவுஸ்திரேலியாவை வீழத்திய பின் வங்க தேச வீரர்கள் தேசிய கீதம் பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோவை பகிர்ந்தது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் இணையதளத்தில் வங்கதேச வீரர்கள் கொண்டாட்டத்தின் வீடியோ பதிவிடப்பட்டதை பார்த்து அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் அணி மேலாளர் Gavin Dovey கடுப்பாகியுள்ளனர்.
இதனையடுத்து, சம்மந்தப்பட்ட கிரிக்கெட் அவுஸ்திரேலிய ஊழியரை இருவரும் திட்டி தீர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Scenes! The Aussies sportingly applauded their rivals post match as Bangladesh celebrated a landmark success in their cricket history... #BANvAUS pic.twitter.com/zO2DBRUorf
— cricket.com.au (@cricketcomau) August 7, 2021
எனினும், தான் செய்ததில் எந்த தவறும் இல்லை என அந்த ஊழியர், ஜஸ்டின் லாங்கர் மற்றும் அணி மேலாளர் Gavin Dovey-யிடம் வாக்குவாதம் செய்ததாக ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.