இலங்கையின் மாபெரும் கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்! முதல் போட்டியில் மோதும் குசால்-திஸாரா
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போல இலங்கையில் எல்.பி.எல் எனும் லங்கா பிரீமியர் லீக் தொடர் ஆண்டு நடத்தப்படுகிறது.
லங்கா பிரீமியர் லீக்
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் முறையாக இந்த போட்டித் தொடர் தொடங்கப்பட்டது. முதல் சீசனில் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் என்ற பெயரில் கோப்பையை வென்ற திஸாரா பெரேரா தலைமையிலான அணி, அடுத்த சீசனில் ஜாஃப்னா கிங்ஸ் என்ற பெயரில் மீண்டும் கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில் மூன்றாவது LPL சீசன் இன்று தொடங்குகிறது. கொழும்பு ஸ்டார்ஸ், தம்புலா ஆரா, காலே கிளாடியேட்டர்ஸ், ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் கண்டி ஃபா ல்கான்ஸ் ஆகிய 5 அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ளன.
ஹம்பன்டோடாவில் இன்று நடக்கும் முதல் போட்டியில் திஸாரா பெரேராவின் ஜாஃப்னா கிங்ஸ் அணியும், குசால் மெண்டிஸின் காலே கிளாடியேட்டர்ஸ் அணியும் மோதுகின்றன.
Preps in full swing ?
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) December 5, 2022
Dambulla Aura gearing up for the #LPL2022#LPLT20 #WinTogether @dambullaAuraLPL @LPLT20 pic.twitter.com/UJS0TdFdLC
இலங்கையின் விளையாட்டு பொருளாதாரம்
முன்னதாக, இலங்கை அணிக்காக விளையாடும் வீரர்கள் இந்த கடினமான போர்களில் தங்களை மேலும் மெருகூட்டிக்கொள்ள இந்த தொடர் ஒரு வாய்ப்பாகும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியது. மேலும், இலங்கையின் விளையாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதமாக இந்த தொடர் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
@OfficialSLC