லங்கா பிரீமியர் லீக்: நான்காவது முறையாக கிண்ணம் வென்ற ஜப்னா கிங்ஸ்
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 4வது முறையாக ஜப்னா கிங்ஸ் அணி சேம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அசித பெர்னாண்டோ 4 விக்கெட்டு
ஜப்னா கிங்ஸ் மற்றும் காலி டைட்டன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஜப்னா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை பெற்றது. ஜப்னா அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய அசித பெர்னாண்டோ 35 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
ரைலி ரூசோவ் 106 ஓட்டங்கள்
இந்த நிலையில், 185 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி, 15.4 ஓவர்கள் முடிவில் இலக்கை சுலபமாக அடைந்தது.
ஜப்னா அணி சார்பில் அதிரடியாக விளையாடிய ரைலி ரூசோவ் 53 பந்துகளை எதிர்கொண்டு 106 ஓட்டங்களையும் குஷல் மெண்டிஸ் 40 பந்துகளில் 72 ஓட்டங்களையும் பெற்றார். இதுவரை நடந்த 5 எல்பிஎல் தொடர்களில் 4ஆவது முறையாக ஜப்னா அணி வெற்றிவாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |