கடுமையான உணவுத் தட்டுப்பாடு: டன் கணக்கில் காய்கறிகளை பறிமுதல் செய்த இலங்கை
உணவுப் பற்றாக்குறையை இலங்கை எதிர்கொண்டுவரும் நிலையில், கடுமையான இறக்குமதித் தடையை மீறியதற்காக 16 டன் பீட்ரூட் இறக்குமதியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த தகவலை சுங்கத்துறை செய்தித்தொடர்பாளர் சுதத்த சில்வா சனிக்கிழமை தெரிவித்துள்ளார். தடை விதிக்கப்பட்ட பட்டியலில் இடம் பெறாத உருளைக்கிழங்கு பெயரில் சுமார் 16 டன் அளவுக்கு பீட்ரூட் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இலங்கையில் தற்போது பீட்ரூட் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து கப்பலில் கொண்டுவரப்பட்ட குறித்த 16 டன் அளவுக்கு பீட்ரூட் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இறக்குமதி செய்தவர் மீது சட்டத்தை மீறியதற்காக வழக்குத் தொடுக்க இருப்பதாகவும் சுதத்த சில்வா சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த ஆண்டு மோசமான விளைச்சலை அடுத்து ஏற்கனவே போராடி வரும் உள்ளூர் விவசாயிகள் இறக்குமதி செய்யப்பட்ட காய்கறிகளால் வருவாய் குறைத்து வருவதாக புகார் கூறியதாக சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுற்றுலா சார்ந்த பொருளாதாரத்தை கொரோனா பரவல் கடுமையாக பாதித்த பின்னர் 2020ல் இலங்கை அரசாங்கம் பல்வேறு அளவிலான இறக்குமதிகளை தடை செய்தது.
இந்த கட்டுப்பாடுகள் தொழில் நிறுவனங்களின் மின் தடைகளுக்கு வழிவகுத்தது, அதே நேரத்தில் சூப்பர் மார்க்கெட்டுகள் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து அரிசி மற்றும் பிற உணவுகளை வழங்குவதில் கட்டுப்படுகள் கொண்டுவந்துள்ளன.
கடந்த மாதம் மட்டும் உணவுப் பொருட்களின் விலை 21.5 சதவீதம் உயர்ந்துள்ளது என்று உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.