முன்பே கணிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முடிவு! படையெடுக்கும் சிங்கள மக்கள்
கடந்த 15 வருடங்களுக்கு முன் இலங்கையின் ஜாதகத்தை பிரபல நாடி ஜோதிடர் ஜெய்சங்கர் கணித்தார். அப்போது அவர் தெரிவித்த விடயமானது பத்திரிக்கைகளில் பிரசுரிக்கபட்டு பிரபல்யமானது.
சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த 2009இல் யுத்தம் முடிவடைந்து சமாதானம் கிடைத்துவிடும் என்றும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாமலாக்கப்படும் எனவும் கணித்து கூறியுள்ளார்.
ஒருவரின் கட்டை விரலின் ரேகையை பதிய செய்து அதன் மூலம் அவருக்கு நாடி ஜோதிடம் பார்க்கப்படுகிறது.
நாடி ஜோதிடம் என்பது கைரேகையை கொண்டு, அவரைப்பற்றி ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டதாக கருதப்படும் ஏடுகளைக் கண்டுபிடித்து அதிலுள்ள அவர் தொடர்பான விடயங்களை வாசித்து விளக்கி கூறுவதாக நம்பப்படும் ஒரு கலையாகும்.
இதற்காக பயன்படுத்தப்படும் 2000 ஆண்டுகள் பழமையான ஓலைச் சுவடிகளை சப்தரிஷிகள் எனப்படும் அகத்தியர், கௌசிகர், வைசியர், போகர்பிரிகு, வசிஸ்தர் மற்றும் வால்மீகி ஆகிய ரிஷிகள் எழுதியதாக சான்றுகள் கூறுகின்றது.
இதை பார்ப்பதற்கு பலரும் வரை நாடி சென்று தனது எதிர்காலத்தை கணித்து வருகின்றார்கள். அந்த வகையில் லங்காசிறியின் பயணம் நிகழ்ச்சியில் ஜோதிடர் ஜெய்சங்கரை சந்தித்து பேசிய போது, அவர் கூறிய மேலதிக தகவல்களை தெரிந்துக்கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |