பல ஆண்டுகளாக பதுங்கியிருந்த இலங்கையை சேர்ந்த குற்றவாளி கைது! தங்களிடம் ஒப்படைக்கும் படி கேட்கும் இலங்கை
தமிழகத்தில் கைதான இலங்கையை சேர்ந்த நபர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால், அவரை தங்களிடம் ஒப்படைக்கும் படி இலங்கை கூறி வருகிறது.
இலங்கையை சேர்ந்த கிம்புலா அலே குணா பல ஆண்டுகளாக தமிழகத்தில் சென்னையில் பதுங்கி இருந்த நிலையில், கடந்த மாத தமிழக பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அந்நாட்டு பொது ஒழுங்குத்துறை அமைச்சர் சரத் வீரசேகரா நேற்று கூறுகையில், முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயகா 1999-ஆம் ஆண்டு கொழும்பு நகரில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார்.
அப்போது நடந்த பேரணியில் பெண் விடுதலைப்புலி நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர்; சந்திரிகா காயம் அடைந்தார்.
இந்த தாக்குதலில் தொடர்புடைய கிம்புலா அலே குணா உடனடியாக இந்தியா தப்பிச் சென்றதாக தெரிகிறது.அவர் மீது விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக சந்தேகம் உள்ளது.குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த அவரை எங்களிடம் ஒப்படைப்பது தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.