லேப்டாப் கம்ப்யூட்டரை இப்படியும் சுத்தம் செய்யலாம்! இது சூப்பர் ஐடியாவா இருக்கே
லேப்டாப் சாதனங்களை அவ்வப்போது சுத்தம் செய்தால், அதன் வாழ்நாளை நீட்டிக்க முடியும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் கீபோர்டுகளில் ஏகப்பட்ட கிறுமிகள் இருப்பதாய் பல்வேறு ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
கீபோர்டுகளை சுத்தம் செய்யும் போதே லேப்டாப் திரையையும் சுத்தம் செய்வது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் சுத்தம் செய்யும் பணி நிறைவாகும்.
கீபோர்டை சுத்தம் செய்வது எப்படி?
லேப்டாப்-ஐ ஸ்விட்ச் ஆஃப் செய்து, அதன் பேட்டரியை கழற்ற வேண்டும்
லேப்டாப்-ஐ திறக்கவும்
லேப்டாப்-ஐ தலைகீழாக பிடித்துக் கொண்டு மென்மையாக தட்டவும், இவ்வாறு செய்யும் போது சிறு தூசிகள் கீழே விழுந்திடும்.
கீபோர்டு முழுக்க காற்றை பீய்த்தடிக்கவும், இது பட்டன்களினிடையே சிக்கியிருக்கும் தூசுகளை அகற்றும்.
லேப்டாப்-ஐ பரவலான இடத்தில் வைத்து கீபோர்டில் சிறிய பிரஷ் பொருத்தப்பட்ட வேக்யூம் செய்யவும்.
கையில் சிறிதளவு பஞ்சு எடுத்துக் கொண்டு அதில் மின்னணு சாதனங்களை சுத்தம் செய்யும் திரவத்தில் நனைத்து, கீபோர்டு முழுக்க மென்மையாக துடைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது கீபோர்டில் அதிக ஈரமாகாதளவு பார்த்து கொள்ள வேண்டும்.
எல்சிடி ஸ்கிரீனை சுத்தம் செய்வது எப்படி?
முதலில் திரையில் உள்ள தூசிகளை அகற்ற காற்றை பீய்த்தடிக்கவும்.
வினிகர் மற்றும் டிஸ்டில் செய்யப்பட்ட நீரை கலந்துகொள்ளவும்.
முன்னதாக கலந்து வைத்திருக்கும் வினிகர் கலவையை திரையில் ஸ்ப்ரே செய்து சுத்தமான துணியை கொண்டு மென்மையாக துடைக்க வேண்டும்.
துணி
திரையை எந்நேரமும் சுத்தமாக வைக்க, அடிக்கடி மைக்ரோஃபைபர் துணியை கொண்டு அதனை துடைக்கலாம்.