இந்தியாவின் லேப்டாப், பிசி இறக்குமதி தடை தாமதம்; இன்னும் மூன்று மாதங்கள் அவகாசம்
மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கும் முடிவை இந்திய அரசு மூன்று மாதங்களுக்கு தாமதப்படுத்தியுள்ளது.
இத்தகைய சாதனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் பெற நிறுவனங்கள் அக்டோபர் 31-ஆம் திகதி வரை அவகாசம் உள்ளதாக அரசு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இவற்றின் இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு நேற்று அவசர உத்தரவு பிறப்பித்தது.
முடிவை மறுபரிசீலனை செய்வதற்கும் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றுவதற்கும் அதிக நேரத்தை அனுமதிப்பதற்காகவே இந்தத் தடை தாமதபடுத்தப்பட்டுள்ளது.
fujitsu
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, அக்டோபர் 31, 2023 வரை உரிமம் இல்லாமல் பொருட்களை இறக்குமதி செய்யலாம்.
ஆனால் நவம்பர் 1-ம் திகதிக்குப் பிறகு தடை செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய சிறப்பு உரிமம் பெற்றவர்கள் மட்டுமே வெளி நாடுகளில் இருந்து HSN 8741-ன் கீழ் மடிக்கணினி போன்ற தானியங்கி தரவு செயலாக்க இயந்திரங்களை இந்தியாவிற்கு கொண்டு வர முடியும்.
economictimes
பாதுகாப்பு காரணங்களையும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் காரணம் காட்டி, லேப்டாப், டேப்லெட் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Indian government puts laptops PCs and tablets import curbs on hold, India Bans import, India Ban laptop import, Personal computers, Tablets, India Import Curbs