கொழுந்துவிட்டெரிந்த குடியிருப்பு... கனடாவில் இளம்வயது மகளுடன் இந்திய தம்பதிக்கு நேர்ந்த துயரம்
ஒன்ராறியோ மாகாணத்தில் கடந்த வாரம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இந்திய வம்சாவளி தம்பதியும் அவர்களது இளம்வயது மகளும் மரணமடைந்துள்ளனர்.
தீயில் கருகிய நிலையில்
குறித்த தகவலை வெள்ளிக்கிழமை பொலிஸ் தரப்பு வெளியிட்டுள்ளது. பிராம்டனில் உள்ள Big Sky Way and Van Kirk Drive பகுதியிலேயே குறித்த சந்தேகத்திற்கு இடமளிக்கும் தீ விபத்தானது மார்ச் 7ம் திகதி நடந்துள்ளது.
பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில், தீயில் கருகிய நிலையில் மனித உடல்களை விசாரணை அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஆனால் எத்தனை பேர்கள் என்பது குறித்து அப்போது உறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பீல் பிராந்திய பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீ விபத்தில் சிக்கிய குடியிருப்பில் இருந்து மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இந்திய வம்சாவளியினர் என்றும் உறுதி செய்துள்ளனர்.
51 வயதான Rajiv Warikoo, அவரது மனைவி 47 வயதான ஷில்பா, இவர்களது மகள் 16 வயதான Mahek Warikoo ஆகியோர்களின் சடலமே கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
@cbc
மேலும், அந்த தீ விபத்தானது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், அது விபத்தல்ல என்றும் உரிய அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பீல் பிராந்திய பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளாக
அந்த சம்பவத்திற்கு காரணம் என்னவாக இருக்க முடியும் என்ற கேள்விக்கு, அந்த குடியிருப்பில் எதுவும் மிஞ்சவில்லை என்றே பொலிஸ் தரப்பு பதிலளித்துள்ளது. இருப்பினும், விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் என்றே விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளாக Rajiv Warikoo குடும்பம் அந்த பகுதியில் வசித்து வந்துள்ளது. ஆனால் அவர்கள் தொடர்பில் அல்லது அவர்களால் எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை என்றே அருகாமையில் வசிக்கும் Kenneth Yousaf என்பவர் தெரிவித்துள்ளார்.
Credit: BramptonFireES
கடந்த வாரம் குடும்ப உறுப்பினர் ஒருவராலையே, அந்த தீ விபத்து தொடர்பில் தாம் அறிய வந்ததாகவும், உடனையே பொலிசாருக்கு தகவல் அளித்ததாகவும் Kenneth Yousaf குறிப்பிட்டுள்ளார்.