பிரித்தானியா வான்வெளியில் தென்பட்ட அரிய நிகழ்வு! ஏலியன்ஸ் வேலையா? வெளியான திகைக்க வைக்கும் புகைப்படம்
பிரித்தானியா வான்வெளியில் பெரிய பறக்கும் தட்டு போன்ற சாதனம் தென்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Devon கவுண்டி கடற்கரை வான்வெளியில் இந்த மர்ம சாதனம் தென்பட்டுள்ளது.
கடற்கரைக்கு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 36 வயதான Matthew Evans என்ற நபரே, குறித்த மர்ம சாதனத்தை பார்த்து திகைத்த போயுள்ளார்.
இந்த சாதனத்தை சுற்றி வெள்ளிச்சம் தெரிந்ததாகவும், 10 வினாடிகளில் அது வேகமாக சென்று முழுவதும் மறைந்துவிட்டதாக Matthew Evans கூறினார்.
குறித்த சாதனத்தை புகைப்படம் எடுத்த Matthew Evans, அதை உள்ளூர் ஊடகத்திடம் பகிர்ந்துள்ளார்.
குறித்த புகைப்படம் இணையத்தில் பரவ தொடங்கியதை தொடர்ந்து, நெட்டிசன்கள் இது விமானமாக இருக்கலாம், படகின் லைட்டாக இருக்கலாம் அல்லது தெரு விளக்கின் எதிரெலியாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.