வெறும் 5 நாட்களில் ரூ 44,935 கோடியை இழந்த இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கி
கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து சரிவை எதிர்கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ கூட, உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட பலவீனமான போக்கின் தாக்கத்தை எதிர்கொண்டது.
வெறும் 5 நாட்களில்
ஸ்டேட் வங்கியின் (SBI) சந்தை மதிப்பு (mcap) ரூ.44,935.46 கோடி குறைந்து ரூ.6,63,233.14 கோடியாக உள்ளது. அதாவது வெறும் 5 நாட்களில் ரூ 44,935 கோடியை SBI இழந்துள்ளது.
அதே நேரத்தில், மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC வங்கியும் அதன் சந்தை மதிப்பில் பெரும் சரிவைக் கண்டது. இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.70,479.23 கோடி குறைந்து ரூ.12,67,440.61 கோடியாக இருந்தது.
சரிவைச் சந்தித்தன
கடந்த வாரம், பிஎஸ்இ குறியீடு 1,844.2 புள்ளிகள் அல்லது 2.32 சதவீதம் சரிந்தது, நிஃப்டி 573.25 புள்ளிகள் அல்லது 2.38 சதவீதம் சரிந்தது. HDFC வங்கியைத் தவிர, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ICICI வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் ITC ஆகியவை சந்தை மதிப்பில் சரிவைச் சந்தித்தன.
இதற்கு நேர்மாறாக, டாடா குழுமத்தின் டிசிஎஸ், சுனில் மிட்டலின் பாரதி ஏர்டெல், இன்ஃபோசிஸ், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் எச்.சி.எல் டெக்னாலஜிஸ் ஆகியவை லாபம் ஈட்டின என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |