மூன்று மாதத்தில் ரூ 16,700 கோடி சம்பாதித்த இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கி
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC டிசம்பர் 2024 உடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் அதன் நிகர லாபம் 2 சதவீதம் உயர்ந்து ரூ.16,736 கோடியாக அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
HDFC வங்கி
குறித்த அறிவிப்புக்குப் பிறகு, ஜனவரி 22 ஆம் திகதி நிலவரப்படி, வங்கியின் சந்தை மதிப்பு ரூ.12.73 லட்சம் கோடியாக உயர்ந்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் HDFC வங்கியானது ரூ.16,373 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
மேலும், 2025 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்த வருமானம் ரூ.87,460 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் மொத்த வருவாய் என்பது ரூ 81,720 கோடி என பதிவாகியிருந்தது.
மேலும், வங்கியின் லாபமும் சற்று முன்னேற்றம் கண்டு ரூ.17,258 கோடியிலிருந்து ரூ.17,657 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் அக்டோபர்-நவம்பர் காலாண்டின் இறுதியில் ரூ.115,016 கோடியாக இருந்த ஒருங்கிணைந்த மொத்த வருமானம் ரூ.112,194 கோடியாகக் குறைந்துள்ளது.
வாராக் கடன்கள்
மேலும், வங்கியின் மொத்த செயல்படாத சொத்துக்கள் (NPAக்கள்) டிசம்பர் 2024 இறுதிக்குள் மொத்த கடன்களில் 1.42 சதவீதமாகக் குறைந்துள்ளன, இது ஒரு வருடத்திற்கு முன்பு 1.26 சதவீதமாக இருந்தது.
மட்டுமின்றி, 2023 ஆம் ஆண்டில் 0.31 சதவீதமாக இருந்த நிகர வாராக்கடன்கள் அல்லது வாராக் கடன்கள் 0.46 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |