ஐந்தே நாளில்... ரூ 44,933 கோடி சம்பாதித்த இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) அபராதம் விதிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC கடந்த வாரம் ரூ.44,933.62 கோடியை ஈட்டியுள்ளது.
மிகப்பெரிய தனியார் வங்கி
திங்கள் முதல் வெள்ளி வரையிலான ஐந்து நாட்களில் அதன் பங்கின் விலை கிட்டத்தட்ட ரூ.25 அதிகரித்ததை அடுத்து, HDFC வங்கி அதன் சந்தை மதிப்பில் மிகப்பெரிய தொகையைச் சேர்த்துள்ளது.
மார்ச் 28ம் திகதி வெள்ளிக்கிழமை HDFC வங்கியின் பங்கு ஒன்றின் விலை ரூ.1,825.50 என முடிவடைந்தது. இதனால் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC-ன் சந்தை மதிப்பு ரூ 13,99,208.73 கோடியை எட்டியது.
மார்ச் 26ம் திகதி KYC குறித்த சில வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக HDFC வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.75 லட்சம் அபராதம் விதித்தது. HDFC-ன் சாதனை ஒருபுறமிருக்க, நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ, கடந்த வாரம் அதன் சந்தை மதிப்பில் ரூ.16,599.79 கோடியை சேர்த்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இதனால் எஸ்பிஐ வங்கியின் சந்தை மதிப்பு ரூ 6,88,623.68 கோடியை எட்டியுள்ளது. கடந்த வாரம் மட்டும், மதிப்பு மிக்க முதல் 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு ரூ.88,085.89 கோடியாக உயர்ந்தது.
மேலும், HDFC வங்கி, Tata Consultancy Services (TCS), Bharti Airtel, ICICI வங்கி, State Bank of India, Bajaj Finance, Hindustan Unilever, மற்றும் ITC ஆகிய நிறுவனங்கள் கடந்த வாரம் ஆதாயமடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை சந்தை மதிப்பில் சரிவை எதிர்கொண்டன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தங்களின் சந்தை மதிப்பில் ரூ.1,962.2 கோடி சரிவடைந்து ரூ.17,25,377.54 கோடியாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |